கிறிஸ்தவ பாடல்

அல்லேலூயா கர்த்தரையே

Allelujah Kartharaiyae

அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்

அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்

வல்லமையாய்க் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்

எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள்

இராஜாதி ராஐனாம் இயேசு ராஐன்

பூமியில் ஆட்சி செய்வார்

அல்லேலூயா அல்லேலூயா

தேவனைத் துதியுங்கள்

தம்பூரோடும் விணையோடும் தேவனைத் துதியுங்கள்

இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்

எக்காளமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்

எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள

சூரியனே சந்திரனே தேவனைத் துதியுங்கள்

ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்

அக்கினியே கன்மலையே படைத்தோரைத் துதியுங்கள்

அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள்

பிள்ளைகளே வாலிபரே தேவனைத் துதியுங்கள்

வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்துநீர் துதியுங்கள்

பெரியவரே பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்

செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள்

ஆழ்கடலே சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்

அலையலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்

தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்

பரலோகத்தை மீட்கப்பட்டோர் நிரப்புவார் துதியுங்கள்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு