கிறிஸ்தவ பாடல்

அலையினில் அமைதி வேண்டும்

alaiyinil Amaithi Vaenndum

அலையினில் அமைதி வேண்டும் -

இந்த அவனியில் நிம்மதி வேண்டும்

வாழ்வில் சாந்தி வேண்டும் – அதை

இறைமகன் இயேசுவே தரக் கூடும் – 2

1. பருவத்தின் சிகரம் வாலிபம் – அது

இன்பத்தை நாடும் காலம்!

இளமையின் இராகமே மோகம்-அது

சிந்தையை மயக்கும் ரோகம்!

பாவம் விருந்தல்ல சாபம் – அந்த

பாவத்தின் முடிவே நரகம்....

நரகம் ! நரகம்! நரகம்! நரகம்!

2. உலகம் கவர்ந்து ஈர்க்கும் – உன்னை

உல்லாசப் பறவையாய் மாற்றும்

அற்பகால மாய சுகங்கள் – உன்

எதிரியின் கண்ணி வெடிகள்

பாவத்தின் விலங்கு இறுகும் – தீய

பழக்கமே உயிரைக் குடிக்கும்...

குடிக்கும் ! அழிக்கும்! ஒழிக்கும்!

சிதைக்கும்!

3. உலகின் அதிபதி சாத்தான் – அவன்

பொய்யை தானே விதைப்பான்

மனிதரைக் கொல்லும்

மாபாதகன்-அவன் இரக்கமில்லாத

வஞ்சகன் மானம் இழக்கச்

செய்து – மன நிம்மதி

கெடுப்பான்.... அரக்கன்!

கெடுப்பான்! சிதைப்பான்!

ஒழிப்பான்! அழிப்பான்!

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு