கிறிஸ்தவ பாடல்

ஏற்றுக்கொண்டருளுமே தேவா! இப்போ

aettukkonndarulumae Thaevaa! - Ippo

ஏற்றுக்கொண்டருளுமே தேவா! – இப்போ

தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்.

1. சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும்,

சாந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கையும்,

தேற்றிக்கொண்டருளும் மன்னிப்பின் மருவும்

திவ்விய பாதத்தில் வைக்கிறேன், ஸ்வாமி.

2. குறைவுண்டு இதிலே, அருமைப் பிதாவே,

குற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்:

முறைப்படி கேட்க நான் தெரியாத பாவி;

முழுதும் மேசியாமேல் வைக்கிறேன், ஸ்வாமி,

3. மறுரூப ஆவி வேண்டுமென் ஸ்வாமி;

மனமெல்லாம் புதிதாக்கிடும் ஸ்வாமி,

சிறுடைப்பட் டடியேன், கேட்கிறேன், ஸ்வாமி;

தேற்றிடும், புது பெலன் ஊற்றிடும், ஸ்வாமி.

4. விசுவாசம் பெருகி நிலைத்திடச் செய்யும் ;

வெளிப்படும் மறைபொருள் பலப்படச் செய்யும் ;

சிசுவைப்போல் மறுபடி பிறந்திடச் செய்யும் ;

தேவாவி என்னுளந் தங்கிடச் செய்யும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு