ஆவியானவரே-8
ஆவியானவரே
தூய ஆவியானவரே-2
யெகோவா சபையோத்
என்னை ஆளுகை செய்பவர்
ஆளுகை செய்து-2
ஆட்கொண்டு நடத்துமே
யெகோவா மெக்காதீஸ்
பரிசுத்தப்படுத்துபவர்
பரிசுத்தப்படுத்தி-2
பூரணமாக்குமே
உம் நாமம் உயர்த்திட
பிரஸ்தாபப் படுத்திட
ஆளுகை செய்து பூரணமாக்குமே-2
ஆசரிப்புக் கூடாரத்தை தேவாலயத்தை
மூடின மகிமையின் மேகமே
முட்செடி நடுவினில் சீனாய் மலைதனில்
இறங்கின பரிசுத்த அக்கினியே
இப்போ எங்கள்மேலே இறங்கி வாருமே
எங்கள் ஒவ்வொருவரையும் அனலாக்குமே-2
வழிக்காட்டும் தீபமாய் பாதைக்கு வெளிச்சமாய்
உம் நல்ல ஆவியால் நீர் என்னை நடத்துமே
உமக்காக வாழ்ந்திட உம் சித்தம் செய்திட
என்னை நீர் மறைத்து உம்மை வெளிப்படுத்துமே
உம்மில் மூழ்கி மூழ்கி தொலைந்து போகணும்
உம் ஆவியின் ஆழத்தில் களிகூரணும்