கிறிஸ்தவ பாடல்

ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலனாகப் பிறந்தார்

aathith Thiruvaarththai Thivviya Arputhap Paalanaakap Piranthaar

ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலனாகப் பிறந்தார்

ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட

ஆதிரையோரையீ டேற்றிட

மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து

மரியாம் கன்னியிட முதித்து

மகிமையை மறந்து தமை வெறுத்து

மனுக்குமாரன் வேஷமாய்

உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்

மின்னுச்சீர் வாசகர் மேனிநிறம் எழும்

உன்னத காதலும் பொருந்தவே சர்வ

நன்மைச் சொருபனார் ரஞ்சிதனார்

தாம் தாம் தன்னரர் வன்னரர்

தீம் தீம் தீமையகற்றிட

சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ

ஷமென சோபனம்பாடவே

இங்கிர்த இங்கிர்த இங்கிர்த நமது

இருதயத்திலும் எங்கும் நிறைந்திட – ஆதி

1. ஆதாம் சாதி ஏவினர் ஆபிரகாம் விசுவாசவித்து

பூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்

ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்

2. பூலோகப் பாவ விமோசனர் பூரண கிருபையின் வாசனர்

மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்

மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார்

3. அல்லேலூயா! சங்கீர்த்தனம் ஆனந்த கீதங்கள் பாடவே

அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட

அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு