கிறிஸ்தவ பாடல்

ஆர் இவர் ஆராரோ – இந்த – அவனியோர் மாதிடமே

Aar Ivar Aararo

ஆர் இவர் ஆராரோ – இந்த

அவனியோர் மாதிடமே

ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த

இவ்வற்புதப் பாலகனார்?

பாருருவாகுமுன்னே – இருந்த

பரப்பொருள் தானிவரோ?

சீருடன் புவி , வான் , அவை பொருள் யாவையுஞ்

சிருட்டித்த மாவலரோ?

மேசியா இவர்தானோ? – நம்மை

மேய்த்திடும் நரர்கோனோ?

ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும்

அதி அன்புள்ள மனசானோ?

தித்திக்குந் தீங்கனியோ? – நமது

தேவனின் கண்மணியோ?

மெத்தவே உலகிறுள் நீக்கிடும்

அதிசய மேவிய விண்ணொளியோ?

பட்டத்துத் துரைமகனோ? – நம்மைப்

பண்புடன் ஆள்பவனோ?

கட்டளை மீறிடும் யாவர்க்கும்

மன்னிப்புக் காட்டிடுந் தாயகனோ?

ஜீவனின் அப்பமோதான்? – தாகம்

தீர்த்திடும் பானமோதான்?

ஆவலாய் ஏழைகள் அடைந்திடும்

அடைக்கல மானவர் இவர்தானோ?

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு