பல்லவி
எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார் - 2
சரணம் 1
இதுவரை உதவின எபிநேசர் உண்டு
இனியும் உதவி செய்வார் - 2 (எதை)
சரணம் 2
சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா உண்டு
பூரண சுகம் தருவார்
சரணம் 3
புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
உயர பறந்திடுவாய் மடிந்து போவதில்லை
சரணம் 4
பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்
அன்பிலே பயமில்லை
சரணம் 5
கர்த்தரை நினைத்து மகிழ்ந்து களிகூர்ந்தால்
உனது விருப்பம் செய்வார்
சரணம் 6
வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிரு
உன் சார்பில் செயலாற்றுவார்
சரணம் 7
வலுவூட்டும் இயேசுகிறிஸ்துவின் துணையால்
எதையும் செய்திடுவாய்