பல்லவி
உம் சமூகமே என் பாக்கியமே
ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
உம் குரல் கேட்க...
ராஜா... இயேசு ராஜா...
சரணம் 1
ஒரு கோடி செல்வங்கள் எனைத் தேடி வந்தாலும்
உமக்கது ஈடாகுமோ
செல்வமே ஒப்பற்ற செல்வமே
நல் உணவே... நாளெல்லாம் உம் நினைவே
சரணம் 2
என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை
என்னே உம் அன்பு
தென்றலே கல்வாரி தென்றலே
அசைவாடும் ஆட்கொள்ளும் என்னில்
ஆளுகை செய்யும்
சரணம் 3
எத்தனையோ எழில் மிகு காட்சிகள் கண்டாலும்
எல்லாமே மாயை ஐயா - 2
தண்ணீரே ஊற்றுத் தண்ணீரே
உம் நதியில் ஒவ்வொரு நாளும்
நான் மூழ்கணுமே