ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 64

உமக்காகத்தானே

பல்லவி

உமக்காகத் தானே - ஐயா நான்

உயிர் வாழ்கிறேன் - ஐயா

இந்த உடலும் உள்ளமெல்லாம் - அன்பர்

உமக்காகத்தானே ஐயா

சரணம் 1

கோதுமை மணிபோல் மடிந்திடுவேன்

உமக்காய் தினமும் பலன் கொடுப்பேன்

அவமானம் நிந்தை சிலுவைதனை

அனுதினம் உமக்காய் சுமக்கின்றேன்

சரணம் 2

எனது ஜீவனை மதிக்கவில்லை

ஒரு பொருட்டாய் நான் கணிக்கவில்லை

எல்லைருக்கும் நான் எல்லாமானேன்

அனைவருக்கும் நான் அடிமையானேன்

சரணம் 3

எத்தனை இடர்கள் வந்தாலும்

எதுவும் என்னை அசைப்பதில்லை

மகிழ்வுடன் தொடர்ந்து ஒடுகிறேன்

மனநிறைவோடு பணி செய்வேன்

சரணம் 4

பண்படுத்தும் உம் சித்தம் போல

பயன்படுத்தும் உம் விருப்பம் போல

உம் கரத்தில் நான் புல்லாங்குழல்

ஒவ்வொரு நாளும் இசைத்திடுமே

சரணம் 5

எனது பேச்செல்லாம் உமக்காக

எனது செயல் எல்லாம் உமக்காக

எழுந்தாலும் நடந்தாலும் உமக்காக

அமர்ந்தாலும் படுத்தாலும் உமக்காக

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு