ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 59

உங்க ஊழியம் நான் ஏன்

பல்லவி

உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்

அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க

சரணம் 1

திட்டங்கள் தருபவரும் நீர்தானையா

செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா

எஜமானனே என் ராஜனே

எஜமானன் நீர் இருக்க

வேலைக்காரனுக்கு ஏன் கவலை

சரணம் 2

எலியாவை காகம் கொண்டு போஷத்தீரே

சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே

தெய்வமே பேசும் தெய்வமே

எலியாவின் தேவன் இருக்க

எதுவும் என்னை அசைப்பதில்லை

சரணம் 3

பவுலையும் சீலாவையும் பாடவைத்தீரே

சிறையிலே நள்ளிரவீல் ஜெபிக்க வைத்தீரே

கதவு திறந்தன கட்டுகள் உடைந்தன

காக்கும் தெய்வம் நீர்இருக்க

கவலை பயம் எனக்கெதற்கு

சரணம் 4

ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கின்றேன்

ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர்

நல் ஆயனே என் மேய்ப்பரே

என் ஆயன் நீர் இருக்க

ஆட்டுக்குட்டிக்கு ஏன் கவலை

சரணம் 5

தகப்பன் தன் பிள்ளைகளை சுமப்பதுபோல

இறுதிவரை உங்களை நான் சுமப்பேன் என்றீர்

தகப்பனே தாங்கும் தெய்வமே

தகப்பன் நீர் இருக்கையிலே

பிள்ளை எனக்கு ஏன் கவலை

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு