பல்லவி
இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே
சரணம் 1
உன்னை நானே தெரிந்து கொண்டேனே - மகனே மகளே
உன் பெயர் சொல்லி
நான் அழைத்தேனே
ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே
சரணம் 2
தாய் மறந்தாலும் நான் மறவேனே - மகனே மகளே
உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை
சரணம் 3
துன்ப நேரம் சோர்ந்து விடாதே - மகனே மகளே
ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு
சரணம் 4
தீயின் நடுவே நீ நடந்தாலும்
எரிந்து நீயும் போகமாட்டாய்
ஆறுகளை நீ கடக்கும் போதும்
மூழ்கி போக மாட்டாய்