ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 51

இயேசுவை நோக்கி

பல்லவி

இயேசுவை நோக்கி பார்த்திடுவோம்

அவரையே கண்முன் நிறுத்திடுவோம்

அவர் செயல்களுக்காய் பாடிடுவோம்

அவர் நினைவாக வாழ்ந்திடுவோம்

ஆமென் அல்லேலூயா - 4

சரணம் 1

நம் கால் இடற விடமாட்டார்

நம்மைக் காப்பவர் உறங்க மாட்டார்

நம் தேவன் அவரோ அயர்வதில்லை

நம் நினைவாக வாழ்கின்றார்

-ஆமென்

சரணம் 2

போகும் போதும் காக்கின்றார்

திரும்பும் போதும் காக்கின்றார்

இப்போதும் எப்போதும் காக்கின்றார்

இனியும் நமக்கு பயமேது

-ஆமென்

சரணம் 3

நம்துன்பம் கண்டு கலங்குகிறார்

நமக்காய் கண்ணீர் வடிக்கின்றார்

நம்பாவம் அனைத்தும் சுமந்து கொண்டு

நமக்காய் பரிந்து பேசுகின்றார்

- ஆமென்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு