ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 38

இயேசு நம் பிணிகளை

பல்லவி

இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார்

நம் நோய்களைச் சுமந்து கொண்டார் - இயேசு

சரணம் 1

நம் பாவங்களுக்காய் காயப்பட்டார்

அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார்

நம்மை நலமாக்கும் தண்டனை

அவர்மேல் விழுந்தது

அவருடைய காயங்களால்

குணமடைந்தோம் - நாம்

சரணம் 2

கொல்வதற்காய் இழுக்கப்படும்

ஆட்டுக்குட்டியைப் போல - மயிர்

கத்திரிப்போன் முன்னிலையில்

கத்தாத செம்மறி போல

வாய் கூட அவர் திறக்கவில்லை

தாழ்மையுடன் அதை தாங்கிக் கொண்டார்

சரணம் 3

நம் பாவம் அனைத்தும் அகற்றி விட்டார்

இறைவனின் பிள்ளையாய் மாற்றிவிட்டார்

கழுமரத்தின் மீது தம் உடலில்

நம் பாவங்கள் அவர் சுமந்தார்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு