ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 322

ஜீவனுள்ள தேவன்

பல்லவி

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்

சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்

பரலோகம் (நம்) தாயகம்

விண்ணகம் (நம்) தகப்பன் வீடு

சரணம் 1

கோடான கோடி தூதர் கூடி அங்கே துதிக்கின்றனர்

பரிசுத்தரே என்று பாடி (ப்பாடி) மகிழ்கின்றனர்

பரிசுத்தர் பரிசுத்தர்

பரலோக தேவன் பரிசுத்தர்

சரணம் 2

பெயர்கள் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கள்

திருவிழாக் கூட்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்

அல்லேலுயா ஓசன்னா கொண்டாட்டம்

கொண்டாட்டம் தகப்பன் வீட்டில்

சரணம் 3

பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள் ஆவி அங்கே

ஏல்லாரையும் நியாயம் தீர்க்கும் நியாயாதிபதி

அங்கே நீதிபதி கர்த்தரே

எல்லாரையும் நியாயம் தீர்க்கும் நீதிபதி

சரணம் 4

புதிய உடன்பாட்டின் இணைப்பாளர் இயேசு அங்கே

நன்மை தரும் ஆசீர்வாதம் பேசும் இரத்தம் அங்கே

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு