ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 32

இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று

பல்லவி

இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று

எல்லா நாவும் அறிக்கை செய்யட்டும்

சரணம் 1

தேவனின் ரூபமாயிருந்தும்

தம்மை தாமே வெறுமையாக்கினார்

அடிமைப் போல தன்னைத் தாழ்த்தினார்

அன்பினால் மனிதரின் சாயலானார்

சரணம் 2

மரணம் மட்டும் கீழ்ப்படிந்தார்

சிலுவை மட்டும் தன்னை த் தாழ்த்தினார்

ஆதலால் தேவன் அவரை உயர்த்தினார்

மேலான நாமம் அவருக்குத் தந்தார்

சரணம் 3

முழங்கால்கள் முடங்கட்டும்

முழக்கம் செய்யட்டுமே

விண்ணவர் மண்ணவர் கீழ் உலகோர்

இயேசுவே ஆண்டவர் என்று சொல்லட்டும்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு