பல்லவி
இதயங்கள் மகிழட்டும்
முகங்கள் மலரட்டும் (சிரிக்கட்டும்)
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
சரணம் 1
மன்னித்து அணைத்துக்கொண்டார்
மகனாய் சேர்த்துக்கொண்டார்
கிருபையின் முத்தங்களால் புது உயிர்தருகின்றார்
கோடி நன்றி பாடிக் கொண்டாடுவோம்
சரணம் 2
அவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம்
தலைமுறை, தலைமுறைக்கும் நம்பத்தக்கவரே
சரணம் 3
தாய் மறந்தாலும் மறக்கவே மாட்டார்
உள்ளங்கைகளிலே பொறித்து வைத்துள்ளார்
சரணம் 4
தண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார்
நடுவில் வந்துவிட்டார் தீங்கைக் காணமாட்டோம்
சரணம் 5
உண்டாக்கினார் நம்மை அவரில் மகிழ்ந்திருப்போம்
ஆட்சி செய்கின்றார் அந்த ராஜாவில் களிகூருவோம்
சரணம் 6
தமது ஜனத்தின்மேல் பிரியம் வைக்கின்றார்
அதிசய இரட்சிப்பினால் அலங்கரிக்கின்றார்
சரணம் 7
நல்லவர் நல்லவரே (அவர்) கிருபை உள்ளவரே
அவரது பேரன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்
சரணம் 8
சஞ்சலமும் தவிப்பும் பறந்து ஒடியதே அது
நித்திய நித்தியமாய் மகிழ்ச்சி நம் தலைமேல்