பல்லவி
நீதியில் நிலைத்திருந்து - உம்
திருமுகம் நான் காண்பேன்
உயிர்த்தெழும் போது - உம் 2
சாயலால் திருப்தியாவேன் நீதியில்...
சரணம் 1
தேவனே, நீர் என் தேவன்
அதிகாலமே தேடி வந்தேன் (2)
நீரின்றி வரண்ட நிலம்போல்
ஏங்குகிறேன் தினம் உமக்காய் (2)
அல்லேலூயா ஓசன்னா - 4
சரணம் 2
ஜீவனை விட உம் அன்பு
அது எத்தனை நல்லது
புகழ்ந்திடுமே, என் உதடு
மகிழ்ந்திடுமே, என் உள்ளம்
அல்லேலூயா ஓசன்னா
சரணம் 3
உயிர்வாழும் நாட்களெல்லாம்
உம் நாமம் சொல்லித் துதிப்பேன்
அறுசுவை உண்பது போல
திருப்தியாகும் என் ஆன்மா
அல்லேலூயா ஓசன்னா
சரணம் 4
படுக்கையில் உம்மை நினைப்பேன்
இராச்சாமத்தில் தியானம் செய்வேன்
துணையாளரே, உம் நிழலை
தொடர்ந்து, நடந்து வளர்வேன்
அல்லேலூயா ஓசன்னா