ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 281

கிதியோனே நீ

பல்லவி

கிதியோன் நீ கிதியோன் நீ

தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பபட்டவன் நீ

வாலிபனே வாலிபனே

ஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா

சரணம் 1

உணவுக்கு போராடும் தேசத்திலே

உண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே வாலிபனே

விளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளை

விரட்டணுமே இயேசு நாமம் சொல்லி

சரணம் 2

தரித்திர ஆவிகளைத் துரத்தணுமே

விக்கிரக ஆவிகளை விரட்டணுமே

கர்த்தர் மனம் இறங்க கதறணுமே

நாடு நலம் பெற ஜெபிக்கணுமே

சரணம் 3

சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடு

பயம் இன்றி திருவசனம் அறிக்கையிடு

மாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொடு

புளியாத அப்பமாக மாறிவிடு

சரணம் 4

இருக்கின்ற பெலத்தோடே புறப்பட்டுப்போ

எதிரியை தோற்கடித்து ஜனங்களை மீட்பாய்

படைத்தவர் உனக்குள்ளே இருப்பதனால்

பராக்கிரமசாலியே பயமே வேண்டாம்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு