ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 279

என்னைப் பெலப்படுத்தும்

பல்லவி

என்னைப் பெலப்படுத்தும் இயேசுகிறிஸ்துவால்

எல்லாமே செய்து நான் முடித்திடுவேன்

சரணம் 1

கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார்

அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார்

சரணம் 2

தீயோர் என் உடலை விழுங்க நெருங்கையில்

இடறி விழுந்தார்கள் இல்லாமல போனார்கள்

சரணம் 3

படையே எனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும்

என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது

சரணம் 4

கேடுவரும் நாளிலே கூடார மறைவினிலே

மறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார்

சரணம் 5

எனக்கு எதிரான மனிதர் முன்னிலையில்

என் தலை நிமிரச் செய்வார் வெற்றி காண செய்வார்

சரணம் 6

அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்

பாடல் பாடிடுவேன் நடனமாடிடுவேன்

சரணம் 7

நாட்கள் கூட கூட பெலனும் பெருகிவிடும்

இரும்பும் வெண்கலமும் பாதத்தின் கீழ் இருக்கும்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு