ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 27

ஆளுகை செய்யும் ஆவியானவரே

பல்லவி

ஆளுகை செய்யும் ஆவியானவரே

பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே

ஆவியானவரே - என் ஆற்றலானவரே

சரணம் 1

நினைவெல்லாம் உமதாகணும்

பேச்செல்லாம் உமதாகணும்

நாள் முழுதும் வழிநடத்தும்

உம் விருப்பம் செயல்படுத்தும்

சரணம் 2

அதிசயம் செய்பவரே

ஆறுதல் நாயகனே

காயம் கட்டும் கர்த்தாவே

கண்ணீரெல்லாம் துடைப்பவரே - என்

சரணம் 3

புதிதாக்கும் பரிசுத்தரே

புதுப்படைப்பாய் மாற்றுமையா

ஊடைத்துவிடும் உருமாற்றும்

பண்படுத்தும் பயன்படுத்தும்

சரணம் 4

அப்பாவை அறிந்திடணும்

வெளிப்பாடு தாருமையா

மனக்கண்கள் ஒளிபெறணும்

மகிமையின் அச்சாரமே

சரணம் 5

உள்ளான மனிதனை

வல்லமையாய் பலப்படுத்தும்

அன்பு ஒன்றே ஆணிவேராய்

அடித்தளமாய் அமைந்திடணும்

சரணம் 6

கிறிஸ்துவின் அன்பின் ஆழம்

அகலம் அயரம் உணரணுமே

நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்

அதிகமாய் செய்பவரே

சரணம் 7

சங்கீதம் கீர்த்தனையால்

பிறரோடு பேசணுமே

எந்நேரமும் எப்போதுமே

நன்றிப் பலி செலுத்தணுமே

சரணம் 8

போர் செய்யும் ஆயதமாய்

உம் வசனம் தாருமையா

எல்லாவித ஜெபத்தோடு

ஆவியிலே மன்றாடணும்

சரணம் 9

என் இதய பலகையிலே

எழுதிடும் உம் வார்த்தை

மையாலல்ல உம் ஆவியாலே

எழுதிடுமே ஏங்குகின்றேன்

சரணம் 10

அரண்களை தகர்த்தெறியும் - என்

அன்பின் வல்லவரே

எதிரான எண்ணங்களை

கீழ்படுத்தும் சிறைபடுத்தும்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு