ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 261

ஜெப ஆவி ஊற்றுமையா

பல்லவி

ஜெப ஆவி ஊற்றுமையா...

ஜெபிக்கணும்... ஜெபிக்கணுமே

சரணம் 1

ஸ்தோத்திர பலி விண்ணப்ப ஜெபம்

எந்நேரமும் நான் ஏறெடுக்கணும்

சரணம் 2

உபவாசித்து உடலை ஒறுத்து

ஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே

சரணம் 3

திறப்பின் வாசலில் நிற்கணுமே

தேசத்திற்காய் கதறணுமே

சரணம் 4

முழங்கால்கள் முடங்கணுமே

கண்கள் எல்லாம் குளமாகணும் - என்

சரணம் 5

தானியேல் போல மூன்று வேளையும்

தவறாமல் நான் ஜெபிக்கணுமே

சரணம் 6

உலகை மறந்து சுயம் வெறுத்து

உம் பாதத்தில் கிடக்கணுமே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு