பல்லவி
ஆரோக்கியம் ஆரோக்கியம்
அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம்
சரணம் 1
நீதியின் சூரியன் என்மேலே - அவர்
சிறகின் நிழலிலே ஆரோக்கியம்
சரணம் 2
கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி
கொழுத்த கன்றுகளாய் வளருவோம்
சரணம் 3
துன்மார்க்க சாத்தானை மிதிப்போம்
காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம்
சரணம் 4
இயேசப்பா நோய்களை சுமந்ததால் .. இனி
நாம் சுமக்க தேவையில்லை தேவையில்லை
சரணம் 5
பொறாமை அவதூறு அகற்றுவோம்
வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம்
சரணம் 6
புதிதாய் பிறந்த குழந்தைகள் போல்
வார்த்தையாம் பாலின் மேல் வாஞ்சையாம்