ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 214

பரிசுத்தமே பரன்

பல்லவி

பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்

பக்தர்கள் தேடும் தேவாலயம்

சரணம் 1

கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று

நிற்கக் கூடியவன் யார்?

மாசற்ற செயல் தூய உள்ளம்

உடைய மனிதனே

சரணம் 2

நாமெல்லாம் பரிசுத்தராவதே

தெய்வத்தின் திருச்சித்தம்

பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும்

தரிசிக்க முடியாது

சரணம் 3

பரிசுத்தரென்றே ஓய்வின்றிப் பாடும்

பரலோக கூட்டத்தோடு

வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி

எந்நாளும் பாடுவேன் - 2

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு