ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 203

நாமே திருச்சபை கிறிஸ்துவின்

பல்லவி

(1கொரி.12:27,26, எபே.4:26,25,28,29,31)

நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல்

ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புக்கள்

சரணம் 1

ஒரு உறுப்பு துன்பப்பட்டால்

மற்ற அனைத்தும் துன்பப்படும் கூடவே துன்பப்படும்

உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்

ஓர் உடலாய் செயல்படுவோம்

சரணம் 2

ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்

மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும் சேர்ந்து மகிழ்ச்சியுறும்

சரணம் 3

இயேசு கிறிஸ்து பாடுபட்டு பகையை ஒழித்தார்

கடவுளோடு ஒப்புரவாக ஓரு உடலாக்கிவிட்டார்

சரணம் 4

பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்

அலகைக்கு இனி இடம் வேண்டாம்

இடம் கொடுக்க வேண்டாம்

சரணம் 5

ஓரு உடலாய் இருப்பதனால் பொய்யை விலக்குவோம்

உண்மைதனை பேசிடுவோம் நன்மை செய்திடுவோம்

சரணம் 6

தேவையிலே உழல்வோர்க்கு பகிர்ந்து கொடுத்திட

நம் கைகளால் பாடுபட்டு உழைத்து மகிழ்ந்திடுவோம்

சரணம் 7

கேட்போரெல்லாம் பயடைந்து பக்தியில் வளர

நல்வார்த்தை நாள்தோறும் சொல்லி உதவிடுவோம்

சரணம் 8

மனக்கசப்பு பழிச்சொற்கள் நீக்க வேண்டுமே

பரிவு காட்டி மனமாற மன்னிக்க வேண்டுமே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு