ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 185

நமக்கொரு தகப்பன் உண்டு

பல்லவி

நமக்கொரு தகப்பன் உண்டு

அவரே நம் தெய்வம்

எல்லாமே அவரிலிருந்து வந்தன

நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம்

சரணம் 1

திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர்

தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்

உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார்

அப்பா.. அப்பா.. தகப்பனே என்று கூப்பிடுவோம்

சரணம் 2

ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய்

ஊருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வோரு நாளும்

கேட்பதை கொடுத்திடுவார் தட்டும்போது திறந்திடுவார்

சரணம் 3

இரக்கம் நிறைந்த தந்தை அவர்

ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்

கணவனை இழந்தவர்க்கு காப்பாளர் அவர்தானே

சரணம் 4

குழந்தையாய் இருக்கும்போதே நேசித்தவர்

எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டர்

கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப்பழக்குகிறார்

சரணம் 5

அன்புக் கரங்களாலே அணைத்துக் கொண்டார்

பாசக் கயிறுகளால் பிணைத்துக்கொண்டார்

நுகத்தை அகற்றிவிட்டார் ஜெயத்தை தந்துவிட்டார்

எங்கள் தகப்பனே எங்கள் தந்தையே

எல்லாமே உம்மிடம் இருந்து வந்தன

எந்நாளும் உமக்குதானே ஆராதனை

சரணம் 1

இரக்கம் நிறைந்த தந்தை நீரே

ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று நீரே

கணவனை இழந்தவர்க்கு காப்பாளர் நீர்தானைய்யா

அப்பா.. அப்பா.. தகப்பனே நன்றி ஐயா

சரணம் 2

குழந்தையாய் இருந்த போதே நேசித்தீரே

எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டீர்

கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப் பழக்குகிறீர்

சரணம் 3

திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் நீரே

தேவைகளை அறிந்த நல்ல தந்தை நீரே

உணவு ஊட்டுகிறீர் உடையும் உடுத்துகிறீர்

சரணம் 4

ஆட்கொண்டு நடத்துகிறீர் அதிசயமாய்

உருவாக்கி மகிழ்கின்றீர் ஒவ்வொரு நாளும்

கேட்பதை கொடுத்திடுவீர் தட்டும்போது திறந்திடுவீர்

சரணம் 5

அன்பு கரங்களாலே அணைத்துக் கொண்டீர்

பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக் கொண்டீர்

நுகத்தை அகற்றிவிட்டீர் ஜெயத்தை தந்துவிட்டீர்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு