பல்லவி
கூடுமே எல்லாம் கூடுமே
உம்மாலே எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது ஒன்றுமில்லை
சரணம் 1
கடல்மீது நடந்தீரையா கடும்புயல் அடக்கினீரே
சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே
சரணம் 2
செங்கடல் உம்மைக் கண்டு ஓட்டம் பிடித்தது ஏன்
யோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றது ஏன்
சரணம் 3
மரித்து உயிர்த்தீரையா மரணத்தை ஜெயித்தீரையா
மறுபடி வருவீரையா உருமாற்றம் தருவீரையா
சரணம் 4
உம் நாமம் சொன்னால் போதும் பேய்கள் ஓடதையா
உம் பெயரால் கைகள் நீட்டினால் நோய்கள் மறையுதையா
சரணம் 5
மலைகள் செம்மறி போல் துள்ளியது ஏன் ஐயா
குன்றுகள் ஆடுகள் போல் குதித்ததும் ஏன் ஐயா
சரணம் 6
வனாந்தர பாதையிலே ஜனங்களை நடத்தினீரே
கற்பாறை கன்மலையை நீரூற்றாய் மாற்றினீரே
சரணம் 7
உடல் கொண்ட அனைவருக்கும் உணவு ஊட்டுகிறீர்
கறையும் காகங்களுக்கு இரை கொடுத்து மகிழ்கிறீர்
சரணம் 8
பகலை ஆள்வதற்கு கதிரவனை உருவாக்கினீர்
இரவை ஆள்வதற்கு விண்மீனை உருவாக்கினீர்