ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 15

அன்பின் தெய்வம்

பல்லவி

அன்பின் தெய்வம் இயேசு

ஆறுதல் தருபவர்

மார்பில் சாய்கின்றேன்

மகிழ்ந்து பாடுவேன் - 2

சரணம் 1

பாதை இழந்த ஆடாய்

பாரினில் ஓடினேன்

சிலுவை அன்பினாலே

திசையும் புரிந்தது

வாழ்வது நானல்ல என்னில்

இயேசு வாழ்கின்றார்

சரணம் 2

இயேசு பேசும்போது - என்

உள்ளம் உருகுதே அவர்

வார்த்தை படிக்கும் போது என்

வாழ்வு மாறுதே

வேதம் ஏந்துவேன் வெல்வேன்

அலகையை - தினம்

சரணம் 3

கண்ணீர் சிந்தும்போது - மனக்

கண்ணில் தெரிகின்றார்

கவலை நெருங்கும்போது - அவர்

கரத்தால் அணைக்கின்றார்

ஆவி பொழிகின்றார்

ஆற்றல் தருகின்றார் - எனக்கு

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு