பல்லவி
அறுவடையோ மிகுதி
ஆட்களோ கொஞ்சம்
அறுவடையின் தேவனை நோக்கிடுவோம்
சரணம் 1
வயல் நிலங்கள் எல்லாம்
விளைந்து விட்டதன்றோ
ஓடி ஓடி அறுப்போம்
களஞ்சியத்தில் சேர்ப்போம்
சரணம் 2
திறப்பிலே நிற்போம்
விரிசல்களை அடைப்போம்
விழித்திருந்து ஜெபிப்போம்
வெற்றி கண்டு மகிழ்வோம்
சரணம் 3
நதியளவு கண்ணீர்
நாள்முழுதும் வடிப்போம்
இந்தியாவை நினைப்போம்
இரவும் பகலும் ஜெபிப்போம்
சரணம் 4
ஆத்ம பாரம் கொள்வோம்
ஆர்வத்தோடு செல்வோம்
யுத்த களத்தில் நிற்போம்
கோலியாத்தை வெல்வோம்
சரணம் 5
தொடர்ந்து நன்மை செய்வோம்
சோர்வில்லாமல் செல்வோம்
குறித்த காலம் வருமே
அறுவடை நிச்சயமே