ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 105

என் உயிரே ஆண்டவரைப் போற்று

பல்லவி

என் உயிரே ஆண்டவரைப் போற்று

முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று

அவர் செய்த சகல உபகாரங்களை நீ

ஒருநாளும் மறவாதே - ஒரு போதும் மறவாதே

சரணம் 1

குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்

நோய்களை குணமாக்கி நடத்துகிறார்

சரணம் 2

படுகுழியினின்று விடுவிக்கிறார்

இரக்கத்தை முடியாக சூட்டுகிறார்

சரணம் 3

வாழ்நாளெல்லாம் நன்மைகளால்

நிறைவாக்கி நம்மை நடத்திச் செல்வார்

(நடத்துகிறார்)

சரணம் 4

கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார்

காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார்

சரணம் 5

மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார்

அதிசய செயல்கள் காணச் செய்தார்

சரணம் 6

இரக்கமும் உருக்கமும் நீடியசாந்தமும்

மிகுந்த கிருபையும் உள்ளவரே

சரணம் 7

எப்போது கடிந்து கொள்பவரல்ல

என்றென்றும் கோபம் கொள்பவரல்ல

சரணம் 8

பாவங்களுக்கேற்ப நம்மை நடத்துவதில்லை

குற்றங்களுக்கேற்ப நம்மை தண்டிப்பதில்லை

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு