ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 1

அடிமை நான் ஆண்டவரே

பல்லவி

அடிமை நான் ஆண்டவரே - என்னை

ஆட்கொள்ளும் என் தெய்வமே

தெய்வமே தெய்வமே

அடிமை நான் ஆட்கொள்ளும்

சரணம் 1

என் உடல் உமக்குச் சொந்தம் - இதில்

எந்நாளும் வாசம் செய்யும்

சரணம் 2

உலக இன்பமெல்லாம் - நான்

உதறித் தள்ளி விட்டேன்

சரணம் 3

பெருமை செல்வமெல்லாம் - இனி

வெறுமை என்றுணர்ந்தேன்

சரணம் 4

வாழ்வது நானல்ல - என்னில்

இயேசுவே வாழ்கின்றீர்

சரணம் 5

என் பாவம் மன்னித்தருளும் - உம்

இரத்தத்தால் கழுவிவிடும்

சரணம் 6

முள்முடி எனக்காக - ஐயா

கசையடி எனக்காக

சரணம் 7

என் பாவம் சுமந்து கொண்டீர் - என்

நோய்கள் ஏற்றுக் கொண்டீர்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு