1
என்னோடிரும், என் நேச கர்த்தரே,
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;
மற்றோர் ஒத்தாசை அற்றுப் போயினும்
நீர், மெய்ச் சகாயரே, என்னோடிரும்.
2
நீர் மேலே குமிழ் போல் என் ஆயுசும்
இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;
கண் கண்ட யாவும் மாறிப்போயினும்
மாறாத கர்த்தரே, என்னோடிரும்.
3
நீர் கூட நின்று தாங்கிவாருமேன்,
அப்போது தீமைக்கு நான் தப்புவேன்;
நீர் என் துணை என்பாதை காட்டியும்,
என் இன்பதுன்பத்தில் என்னோடிரும்.
4
நான் அஞ்சிடேன் நீர் கூடத் தங்கினால்;
என் க்லேசம் மாறும் உன் பிரசன்னத்தால்
சாவே எங்கே உன் கூரும் ஜெயமும்?
என்றாரவாரிப்பேன், என்னோடிரும்.