பல்லவி
பெத்லகேமில் பிறந்தாரைப்
போற்றிடுத்தி, மனமே - இன்னும்,
அனுபல்லவி
கவிக்கும் பனியுந் தொட்டிலிலே, கோமகனும் தொட்டிலிலே
ஆராரோ ஆராரோ ஆராரோ - (2)
தூங்கு - தூங்கு பாலா நீ (2)
1
சருவத்தையும் படைத்தானே, சர்வசல்லவர் - இங்கு
தாழ்மையுடன் தூய்மையில் தலைசாய்க்கலானார்.
— பெத்
2
சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் - இங்கு
பங்கமுற்ற பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார்.
— பெத்
3
முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக - இங்கு
பரத்தை விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே.
— பெத்
4
ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் - இங்கு
ஆக்களுடைய சத்தத்துக்குள் அழுது பிறந்தார்.
— பெத்
5
இந்தடையாய் அன்பு வைத்த எம் பெருமானை - நாம்
எண்ணமுடன் போய்த்துதிக்க ஏகிடுவோம்.
— பெத்