அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 6

எண்ணிலடங்கா ஸ்தோத்திரம்

எண்ணிலடங்கா ஸ்தோத்திரம் - தேவா

என்றென்றும் நான் பாடுவேன்.

இந்நாள் வரை என் வாழ்விலே

நீர் செய்த நன்மைக்கே. - எண்

1

வானாதி வானங்கள் யாவும்

அதின் கீழுள்ள ஆகாயமும்

பூமியில் காண்கின்ற யாவும்

கர்த்தா உம்மைப் போற்றுமே - ஆஹா! - எண்

2

காட்டினில் வாழ்கின்ற யாவும்

கடும் காற்றும் பனி தூறலும்

நாட்டினில் வாழ்கின்ற யாவும்

நாதா உம்மைப் போற்றுமே - ஆஹா! - எண்

3

நீரினில் வாழ்கின்ற யாவும் - இந்

நிலத்தின் ஜீவராசியும்

பாரினில் பறக்கின்ற யாவும்

பரனே உம்மைப் போற்றுமே - ஆஹா! - எண்

4

வால வயதுள்ளோனாரும் - மிகும்

வயதால் முதிர்ந்தோர்களும்

பாலகர் தம் வாயினாலும்

பாடி உம்மைப் போற்றுவாரே - ஆஹா! - எண்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு