அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 500

மாட்சி மிகும் திவ்ய நகர்

1

மாட்சிமிகும் திவ்ய நகர் மகிமை என்ன சொல்வேன்!

அந்த மங்களம் சேர் மாளிகைக்குள் என்று சேருவேன்!

2

நாம் எல்லாரும் நாடுகின்ற பட்டணமது!

நமது நாதரேசு வீற்றிருக்கும் பட்டணமது!

3

பட்டணத்தின் வீதியெல்லாம் சுத்தப் பொன்னாமே!

அங்கே பாடுவோரும் ஆடுவோரும் கோடாகோடியே!

4

ஜீவநதி பாயுகின்ற பட்டணமது!

நிதம் சித்திரமோடேயிலங்கும் பட்டணமது!

5

சாவுக்கேயில்லாத பட்டணமது!

நிதம் சங்கீதங்கள் தான் முழங்கும் பட்டணமது!

6

எண்ணிறந்த தூதர் போற்றும் பட்டணமது!

அங்கே ஓயாமல் கீதம் பாடும் பட்டணமது!

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு