அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 491

மணவாழ்வு

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு; - மங்கள வாழ்வு

வாழ்வினில் வாழ்வு (2)

மருவிய சோபன சுப வாழ்வு.

1

துணை பிரியாது, தோகையிம்மாது

சுப மண மகளிர் இதுபோது

மணமுறையோது வசனம் விடாது

வந்தன ருமதருள் பெறவேது,-நல்ல

மண

2

ஜீவதயாகரா, சிருஷ்டியதிகாரா,

தெய்வீக மாமண வலங்காரா,

தேவ குமாரா திருவெல்லையூரா

சேர்ந்தவர்க் கருள் தராதிருப்பீரா? - நல்ல

மண

3

குடித்தன வீரம், குணமுள்ள தாரம்,

கொடுத்துக் கொண்டாலது சமூசாரம்,

அடக்க மாசாரம், அன்பு, உதாரம்,

அம்புவி தனில் மனைக் கலங்காரம்.-நல்ல

மண

4

மன்றல் செய் தேவி, மணாளனுக்காவி,

மந்திரம் அவர்க்குனை மேதாவி

அன்றியிப் பூவி லமிர்த சஞ்சீவி;

அவனையில்லாதவ னொரு பாவி- நல்ல

மண

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு