அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 428

சேனைகளின் தேவன்

வரிகள்: இணைய தொகுப்பு – சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்

தேவன் நம்மோடு இருக்கின்றார்

சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்

நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர்

1. எரிகோ போன்ற சோதனைகள் எதிரிட்டு வந்தாலும்

தகர்த்திடுவார் நொறுக்கிடுவார் ஜெயத்தைத் தந்திடுவார்

2. சேனையின் கர்த்தரை நம்பிடுவோம் பாக்கியம் அடைந்திடுவோம்

உயர்த்திடுவார் தாங்கிடுவார் நன்மையால் நிரப்பிடுவார்

3. ஆவியின் வரங்களைத் தந்திடுவார் ஆவியைப் பொழிந்திடுவார்

ஏகிடுவாய் எழும்பிடுவாய் சீயோனில் சேர்ந்திடுவாய்

4. வாலிபரே நாம் எழும்பிடுவோம் வசனத்தைப் பிடித்திடுவோம்

வென்றிடுவோம் சென்றிடுவோம் ஊழியம் செய்திடுவோம்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு