அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 417

தேசமே பயப்படாதே

தேசமே பயப்படாதே

மகிழ்ந்து களிகூரு

சேனையின் கர்த்தர் உன் நடுவில்

பெரிய காரியம் செய்திடுவார்

கசந்த மாரா மதுரமாகும்

கொடிய எகிப்து அகன்றிடும்

நித்தமும் உன்னை நல்வழி நடத்தி

ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்

ஆற்றலாலும் அல்லவே

சக்தியாலும் அல்லவே

ஆவியினாலே ஆகும் என்று

ஆண்டவர் வாக்கு அருளினாரே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு