துதிப்பதே என் தகுதியல்லோ
துதித்திடுவேன் என் இயேசுவை.
1
மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார்
பார்வை நிறைந்த தூய்மை தந்தார்
சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார்
செயல் நிறைந்த திட்டங்களை தந்தார்.- துதி
2
ஆபத்து நேரத்தில் அடைக்கலம் தந்தார்
பெலவீன நேரத்தில் பெலன்தந்தார்
செய்தி நேரத்தில் தூது தந்தார்
பாடிய நேரத்தில் பரவசம் தந்தார்.- துதி