அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 381

மான்கள் நீரோடை

வரிகள்: இணைய தொகுப்பு – மான்கள் நீரோடை வாஞ்சித்து

மான்கள் நீரோடை வாஞ்சித்து

கதறும் போல் தேவனே

எந்தன் ஆத்துமா உம்மையே

வாஞ்சித்து கதறுதே

தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்

கோட்டையும் நீர் என்றும் காப்பீர்

1. தேவன் மேல் ஆத்துமாவே

தாகமாயிருக்கிறதே

தேவனின் சந்நிதியில் நின்றிட

ஆத்துமா வாஞ்சிக்குதே

2. ஆத்துமா கலங்குவதேன்

நேசரை நினைத்திடுவாய்

அன்பரின் இரட்சிப்பினால் தினமும்

துதித்து போற்றிடுவோம்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு