அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 358

கர்த்தர் என் மேய்ப்பராய்

வரிகள்: இணைய தொகுப்பு – கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றபோது

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றபோது

என் வாழ்வில் குறை என்று ஏதும் இல்லை

நன்மையும் கிருபையும் என்னை என்றும் சூழ

ஜீவிய காலமெல்லாம் மேய்ப்பரானீர்

தூயரே தூயரே என்னை ஆளும் பரிசுத்தரே

தூயரே தூயரே என்னை காக்கும் நல் மேய்ப்பரே

என் இயேசுவே நல் மேய்ப்பரே

என் ஆயனே நல் வழிகாட்டியே

பாதை தெரியாமல் அலைந்த என்னை

பரிவாக என்னை வந்து மீது கொண்டீர்

என் கால்கள் இடறாமல் காத்துக்கொண்டீர்

முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர்

பகைவர் என்னை சுற்றி நெருங்கும்போது

பந்தியை ஆயத்தப்படுத்துகிறீர்

என்னை உம் கரங்களால் அபிஷேகித்தீர்

என் பாத்திரம் நிரம்பி வழிய செய்தீர்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு