அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 300

கண்களை ஏறெடுப்பேன்

கண்களை ஏறெடுப்பேன் - மாமேரு நேராய் என்

கண்களை ஏறெடுப்பேன்.

விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்

தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும் - கண்

1. காலைத் தள்ளாட வொட்டார் - உறங்காது காப்பவர்

காலைத் தள்ளாட வொட்டார்

வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர்

காலையும் மாலையும் கண்ணுறங்காரவர் - கண்

2. பக்தர் நிழல் அவரே - எனை ஆதரித்திடும்

பக்கநிழல் அவரே

எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தாது

அக்கோலம் கொண்டேன்னை அக்காவல் புரியவே - கண்

3. எல்லாத் தீமைகட்கும் - என்னை விலக்கியே

எல்லாத் தீமைகட்கும்

பொல்லா உலகினில் போக்குவரத்தையும்

நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் - கண்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு