அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரைத் - துதி
1
நான் உயிருள்ள மட்டும்
என் கர்த்தரைத் துதிப்பேன்
நான் உள்ளளவும் என் தேவனைக்
கீர்த்தனம் பண்ணுவேன். - அல்லே
2
பிரபுக்களையும்,
மனு புத்திரனையும்,
இரட்சிக்கத்திராணியில்லாத இவர்களை
நம்பாதேயுங்கள். - அல்லே
3
அவன் ஆவி பிரியும்,
தன் மண்ணுக்குத் திரும்புவான்,
அந்நாளிலே அவன் யோசனைகள்
அழிந்து போகுமே. - அல்லே
4
யாக்கோபின் தேவனைத்
தன் துணையாகக் கொண்டிருந்து
தன் கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கிறவனே
பாக்கியவான். - அல்லே
5
வானம் பூமி சமுத்திரம்
அவைகளிலுள்ள யாவும்,
உண்டாக்கினவர் என்றென்றைக்கும்,
உண்மையைக் காக்கிறவர். - அல்லே