அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 232

என்னை ஜீவ பலியாய்

வரிகள்: இணைய தொகுப்பு – என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்

என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்,

ஏற்றுக் கொள்ளும், யேசுவே.

அன்னை தந்தை உந்தம் சன்னதி முன்னின்று

சொன்ன வாக்கத்தத்த மல்லாது, இப்போது - என்னை

1. அந்தகாரத்தி னின்றும், பவப் பேய்

அடிமைத் தனத்தி னின்றும்

சொந்த ரத்தக் கிரயத்தால் எனை மீட்ட

எந்தையே, உந்தனுக்கிதோ! படைக்கிறேன் - என்னை

2. ஆத்ம சரீரமதை உமக்கு

ஆதீன மாக்கி வைத்தேன்.

பாத்ரமதாய் அதை பாவித்துக் கொள்ளக்

காத்திருக்கின்றேன், கருணைசெய், தேவா - என்னை

3. நீதியி னாயுதமாய் அவயவம்

நேர்ந்து விட்டேன் உமக்கு,

ஜோதி பரிசுத்த ராலய மாகவே

சொந்தமாய்த் தந்தேன் என்றன் சரீரத்தை - என்னை

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு