அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 1

அதிகாலையிலும் தேடுவேன்

அதிகாலையிலுமைத் தேடுவேன் முழுமனதாலே

தேவாசீர் வாதம் பெற – நாடுவேன்

ஜெப தபத்தாலே.

இதுகாறும் காத்த தந்தை நீரே,

இனிமேலும் காத்தருள் செய்வீரே.

பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே

பத்திரமாயெனை உத்தமனாக்கிடும் தேவே – அதி

1

போன ராமுழுவதும் பாதுகாத் தருளின போதா! – எப்போதும்

எங்களுடனிருப்பதா யுரைத்த நல்நாதா!

ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா!

எனக்கான ஈசனே! வான ராசனே!

இந்த நாளிலுமொரு பங்கமில்லாமல் காரும் நீ தா! – அதி

2

பல சோதனைகளால் சூழ்ந்து நான் கலங்கிடும் போது – தப்பாது

நீன் கிருபை தாங்கிட வேணுமப்போது

விலகாது என் சூழ்கம் என்ற வாக்கில் தவறேது?

விசுவாசங் கொண்டு மெய்ப்பாசமுண்டிட

விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது – அதி

3

நற்யாவர்க்குமுற்ற நண்பனாய் நடந்திடவையே – தீநாவின்

பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே

பரலோக ஆவியாலே மாரி போலெனில் பெய்யே,

புகழான நாதனே! வேத போதனே!

பூரணமாயெனைப் போற்றுவேன் தினம் தினம் மெய்யே – அதி

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு